ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவாலயம் அருகே 6 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலகின் மிக கொடூரமான பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது.
வியன்னாவின் தேவாலயப் பகுதியில் 6 இடங்களில் கண்மூடித்தனமாக மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உட்பட 2 பேர் பலியாகினர். பொதுமக்களில் பலர் படுகாயமடைந்தனர்.
போது இந்த தாக்குதலுக்கு உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபுதாங் அல்பேனி எனவும் அறிவிக்கப்பட்டு அவரது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் பயங்கரவாதி அல்பேனி, தானியங்கி துப்பாக்கி, கூரிய ஆயுதம், பிஸ்டல் ஆகியவற்றை கையில் வைத்திருக்கிறார்.