கொரோனா அச்சத்தினால் குருநாகல் மாவட்டத்தில் மேலும் 06 கிராமங்கள் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி பன்னல கிராம சேவைப் பிரிவுக்கு உட்பட்ட பன்னல, கொஹம்பபொல, படபெத்த, இஹலகல்யாய, மாஹரகம, பஹலகலயாய மற்றும் முக்கலான ஆகிய கிராமங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் திடீரென நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பன்னல பொது சுகாதார அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.