கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்று (11) நால்வர் உயிரிழந்தனர்.
அதில் மூன்று பெண்களும் ஆண்ணொருவரும் அடங்குகின்றார்.
அவர்களின் விவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்பிரகாரம்.
1. கொழும்பு 10 மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 வயதான பெண் மரணமடைந்தார். அவர், நீண்டகாலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.
2. கொழும்பு 10 மாளிகாவத்தைச் சேர்ந்த 69 வயதான பெண்ணும் அடங்குகின்றார். அப்பெண்ணும் நீண்டகாலமாகவே நோய்வாய்பட்டிருந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அப்பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
3. வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான நபரும் கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார். நீண்டநாள் நோய்வாய் பட்டிருந்தார். அத்துடன் குறுகிய காலத்துக்குள் காய்ச்சல் இருந்துள்ளது. அதனுடன் நிமோனியாவும் ஏற்பட்டுள்ளது. அவரும் வீட்டிலேயே மரணமடைந்துள்ளார்.
4. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த நான்காவது நபர் பெண் ஆவார். கனேமுல்லையைச் சேர்ந்த 88 வயதான அப்பெண், மினுவங்கொட கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்ட நபர்களுடன் நெருங்கி பழகியுள்ளார். அதன்பின்னரே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை கண்டறியப்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர். அங்கொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னரே இன்று மரணமடைந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.