அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தினார்.
இரண்டு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இரு நாட்டு உறவுகளையும் தொடர்ந்து மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்தினார்.