web log free
July 02, 2025

புலிகள், படையினரை விடுவிக்கவும்


சிறையில் அடைக்கப்பட்டுள்ள படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஆகியோரை விடுவிப்பதன் ஊடாக, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வொன்றை காணமுடியும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு தன்னுடைய பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும், மீண்டும் ஆணைக்குழுக்களை நிறுவுவதன் ஊடாக, பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணமுடியாது எனத் தெரிவித்துள்ள அவர், நடைமுறைக்கு சாத்தியமானவற்றை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தன்னுடைய பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd