முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத குற்றச்சாட்டில் 21 பேர் நேற்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12 நாட்களில் 158 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.