மேல் மாகாணத்திலிருந்து எவரும், எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் வெளியேறமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டளையை இராணுவத் தளபதியே பிறப்பித்துள்ளார். எந்த அதிகாரத்தின் கீழ், அவரால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதென கேள்வியெழுப்பிய எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, இக்கட்டளை சட்டத்துக்கு முரணானது என்றார்.
2020 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு சட்ட அங்கிகாரம் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்த அவர், தற்போது அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், 123 ஆண்டுகள் பழமையானது. இது கொலரா நோய் ஏற்பட்ட காலத்தில் கையாளப்பட்ட சட்டமாகும் என்றார்.
நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாது எந்த நிறுவனத்தின் நிதியையும் கையாள முடியாது. எனினும், நாடாளுமன்ற அனுமதி இல்லாது ஜனாதிபதியினால் பொது நிதி, இரண்டு தடவைகள் கையாளப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஆகையால், இந்த நிதியொதுக்கீட்டு சட்டமூலம் சட்ட ரீதியற்றது என்றார்.