முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது..
2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தி பஸ்கள் மூலம் புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை அழைத்துச் சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரிஷாத் பதியுதீன் கடந்த மாதம் 19ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டார்.
6 நாட்களாக ரிஷாட் பதியுதீனை தேடிவந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்தனர்.