சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சி தயாராகி வருகின்றது.
கொவிட் தொற்று முறையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தவறியுள்ளதாக தெரிவித்தே, சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லை பிரேரணையை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியிலுள்ள அரசாங்கம் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தவறியுள்ளதாகவும் எதிர்க்கட்சி குறிப்பிடுகின்றது.
”GOTA FAIL” என்ற பெயரில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் முறையான திட்டங்கள் எதுவும் கிடையாது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்துகின்றது.