வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (14 ) மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகை யில்,
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவொன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர்.
அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கிழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்துக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.