கொரோனா அச்சத்தின் காரணமாக, மீன்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துவருகின்றது.
கடலுணவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்குவதற்கு அரசாங்கம் பல்வேறான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி, கொழும்பில் சற்றுமுன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பச்சை மீனொன்றை அப்படியே பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார்.
இவர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.