ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் படுகொலை செய்வதற்கு முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையான, மர்சலிஸ் தோமஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கோட்டை பதில் நீதவான் ஜயந்த டயஸ் நாணயக்கார, இன்று (27) மேற்கண்டவாறு கட்டளையிட்டார்.
இந்தியப் பிரஜை, கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளமையால், விடுதலை செய்யுமாறு, நீதவான் கட்டளையிட்டார்