web log free
December 05, 2025

சிறுநீரால் முகம்சுளிக்க வைத்த வரலட்சுமி

நடிகை வரலட்சுமி மாஸ்க் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்க் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நபர் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் எல்லா இடங்களிலும் இன்னும் கொரோனா அதிகமாக உள்ளது. பொறுப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் என்ன ஒரு கீழ்த்தரமான பதிவு, உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேறு எதுவும் கிடையாதா? என தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Last modified on Thursday, 19 November 2020 04:46
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd