இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குப்பற்றும் ஐந்து அணிகளும் ஹம்பாந்தோட்டைக்கு வருகைத் தந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.
ஹம்பாந்தோட்டை ஷங்கிரில்லா நட்சத்திர விடுதியில் ஐந்து அணிகளின் வீரர்கள் மற்றும் முகாமைத்துவத்தினர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்தது.
இறுதியாக கோல் கிளாடியேட்டர் அணி ஹம்பாந்தோட்டைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் -19 வைரஸ் தாக்கம் காரணமாக, சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய, அனைத்து அணிகளும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.