ஐ.டி.எச்-இல் இருந்து தப்பிச்சென்ற இரண்டரை வயது குழந்தை, எஹெலியகொட பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் அங்கு வந்து குழந்தையை வீட்டாரிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குழந்தை ஒப்படைக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுகாக ஐ.டி.எச்-இல் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் அங்கிருந்து இரவு 9.10 மணியளவில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த தப்பிச்சென்ற 26 வயதுடைய குறித்த பெண்ணை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.