இங்கிலாந்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இலங்கை நேற்று (19) சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், இஸ்ரேல் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளும் இந்த பட்டியில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வாரம் எந்த நாடுகளும் பாதுகாப்பான பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நமீபியா, ருவாண்டா, பொனெய்ர், செயின்ட் யூஸ்டேடியஸ் & சபா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் யு.எஸ். வெர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்து சனிக்கிழமை முதல் இங்கிலாந்துக்கு வரும்போது சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.