தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற குற்றச்சாட்டில் சிங்கள நடிகர் வில்சன் கரு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கிருலப்பனை பொலிஸாரால் அவர் இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முகக் கவசம் அணியாத நிலையில் சென்றதாகவும், அவரை முகக் கவசம் அணியுமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கிய போது பொலிஸாரை அவர் தாக்க முயன்றார் என தெரிவிக்கப்படுகிறது.