கொழும்பு IDH இல் சிகிச்சைப் பெற்று வந்த 22 வயது இளைஞர் ஒருவர், அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரின் பொறுப்பின் கீழ் அவர் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த நோயாளி தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர், போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.