இ.போ.ச பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்காக கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்கும் சகல பயணிகளிடமும் அறவிடப்படும் பயணக் கட்டணத்தில் ஒரு ரூபாயை கொவிட் 19 பாதுகாப்பு நிதிக்காக ஒதுக்கவுள்ளதாக கிங்ஸ்லி ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இ.போ.ச பஸ்களில் பயணிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.