யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள் வெளியேறுவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸாரின் தீவிர கண்கானிப்புக்குள் உணவகம் கொண்டுவரப்பட்டுள்ளது.