நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி காட்டில் தற்போது மழை பொழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் லலித் குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
லலித் குகன் கடத்தல் வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது.