பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண்ணொருவர் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றதாக கண்டறியப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.