முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகியுள்ளார்.
எட்டாவது தடவையாக இன்று (25) முற்பகல் மைத்திரிபால சிறிசேன, ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள நிலையில் அவரிடம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.