web log free
March 26, 2026

பொலிஸ் அதிகாரி திடீர் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, காலி முகத்திடலில் இன்று(26) காலை உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே அந்த அதிகாரி திடீர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.


உடனே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd