அரசாங்க வருமானத்தில் பாதியளவு தொகை அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுவதாக அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச முகாமைத்துவ ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தின் பின்னணியில் தோல்விகண்ட அரசியல் வாதிகள் இருப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
“அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை ஊழியர்கள் முன்னெடுக்கும் வேலை நிறுத்தம் நியாயமற்றது முகாமைத்துவ உதவியாளர்கள் சமர்ப்பித்த 12 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
பட்டதாரிகளின் சம்பளத்தைப் போன்று தமக்கும் சம்பளம் வழங்குமாறு முகாமைத்துவ உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஆனால், இதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன்னர் இரண்டாயிரத்து 500 ரூபா சம்பள அதிகரிப்பு மாத்திரமே இடம்பெற்றது.
ஆனால், நல்லாட்சி அரசாங்கம் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அரச ஊழியர்களின் பதவியுயர்வு தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன” என்றார்.