web log free
January 10, 2025

திருகோணமலை அருகே கரையைக் கடக்கும் ‘புரெவி புயல்’

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயலானது டிசம்பர் இரண்டாம் திகதி மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் திருகோணமலை அருகே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயலானது கடந்த 26ஆம் திகதி காலை 2 மணி அளவில் கரையை கடந்தது. இந்த ‘நிவர்’ புயலால் தமிழகத்தில் கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட சில  மாவட்டங்கள் கடும் பாதிப்புக்களை சந்தித்தன.

சென்னையிலும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு ஓரளவு தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் ‘நிவர்’ புயலைத் தொடர்ந்து புதிய புயலான ‘புரெவி’ உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரித்திருந்தது.

தற்போது கன்னியாகுமரியில் இருந்து 1040 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd