எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
தனது மூன்றாவது போட்டியில் காலி கிலெடியேடர்ஸ் அணியை எதிர்கொண்ட கண்டி டஸ்கர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
திங்கட்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் மென்டிஸ் 49 ஓட்டங்களையும், பிரென்டன் டெய்லர் ஆட்டமிக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலளித்தாடிய காலி கிலெடியேடர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களையே பெற முடிந்தது.
காலி கிலெடியேடர்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்ததுடன் அரை இறுதி வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.