யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அதனை அயலிலுள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், குடிதண்ணீர் கேட்டுள்ளார். 3 செம்பு குடிதண்ணீரை அருந்திய அவர், நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்
இதனால், அவரது உறவினர்கள் உடனடியாக பருத்தித்துறை- மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது கையில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுகின்றது என ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.