புரெவி புயல் காரணமாக நாட்டில் பாரியளவான சேதங்கள் பதிவானதாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
எனினும் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதோடு வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.