புரெவி சூறாவளி தாக்கத்தால் யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவர் காரைநகர் ஊரி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுழிபுரம் - பெரியபுலோவை பகுதியை சேர்ந்த 37 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.