சுகதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பண்டாரக - அட்டளுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல வந்த போது நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.