கண்டி பிரதேசத்தை அண்மித்த காடொன்றில் உயிரிழந்த குரங்கொன்றுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி நகருக்கு அண்மித்த, உடவத்த வனத்தில், அண்மையில் பல குரங்குகள் உயிரிழந்துள்ளன.
இந்த நிலையில், உயிரிழந்த குரங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் குரங்கொன்றுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, குறித்த குரங்குகளின் உடலில் விஷம் பரவியிருப்பதால் இவ்வாறு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.