அனுமதிப்பத்திரமின்றி யானை குட்டியை தம்வசம் வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வண. உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக, சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்ட சகல குற்றஞ்சாட்டுகளிலிருந்தும் வண. உடுவே தம்மாலோக்க தேரர் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்றமே அவர், இவ்வாறு விடுவித்துள்ளது. நீதிபதி சம்பத் விஜயரத்னவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
“வழக்கின் பிரதிவாதியான வண. உடுவே தம்மாலோக்க தேரருக்க எதிராக, முறைப்பாட்டாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், போதுமனளவு நிரூபிக்கப்படவில்லை” என நீதிபதி அறிவித்தார்.
“இந்த யானைக் குட்டி, பிரதிவாதியான தேரரிடம் இருந்தது என, முறைப்பாட்டாளரினால், சாட்சிகள் பல முன்வைக்கப்பட்டாலும், அந்த யானை அவரிடமிருந்தது என்பதை நிரூபிக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
“அதேபோல, இந்த வழக்கில், அன்று அமைச்சரகை இருந்த வசந்த சேனாநாயக்க என்ற சாட்சியாளர் அளித்த சாட்சியம், ஏற்றுக்கொள்ளமுடியாத மட்டத்தில் இருக்கின்றது” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அதனடிப்படையில், சாட்சியாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, சாதாண சந்தேகத்துக்கு இடமின்ற நிரூபிக்கப்படவில்லை என்பதால், அந்த வழக்கிலிருந்து, வழக்கின் பிரதிவாதியான வண. உடுவே தம்மாலோக்க தேரரரை விடுவிப்பதாக அறிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டை தாக்கல் செய்தவ்றகு எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி ஜன பண்டார, நீதிமன்றத்தின் கனத்துக்கு கொண்டுவந்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், கிருளபனை, எலன்மெதினியாராம விஹாரைக்குள் அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை வைத்திருந்தமையினால், விலங்கினங்கள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளார் என குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபரினால், உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.