யானை- மனித மோதல் காரணமாக, உலகில் அதிகளவு யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை காணப்படுவதாக அரச கணக்குகள் பற்றிய குழுவின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், யானை- மனித மோதலில் அதிகளவான மனிதர்கள் உயிரிழக்கும் நாடுகள் பட்டியலிலும் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யானை- மனித மோதல் தொடர்பாக, பல வருட முன்னனுபவமிக்க நிபுணர் பேராசிரியர் ப்ருதிவிராஜ் பெர்ணான்டோ, அரச கணக்குகள் பற்றிய குழுவில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
யானை- மனித மோதலில் அதிகளவான மனிதர்கள் உயிரிழக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யானை- மனித மோதல் காரணமாக அண்ணளவாக வருடமொன்றுக்கு 272 யானைகள் உயிரிழப்பதுடன், கடந்த வருடம் குறித்த தொகை 407 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை- மனித மோதலில் வருடமொன்றுக்கு 85 மனிதர்கள் கொல்லப்படுகின்ற நிலையில், 2019 ஆம் ஆண்டு 122 மனித கொலைகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.