முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக விசேட மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள வழக்கு, விசேட மேல் நீதிமன்றத்தின் தலைவர் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் மன்றில் இன்றைய தினம் ஆஜரான சட்டத்தரணிகள், தமது தரப்பு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட முறை தொடர்பில் அடிப்படை எதிர்ப்பை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.