எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் பேக்கரி உற்பத்திப்பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக செலவுகள் உயர்வடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.