அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு மார்ச் 25ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அன்றைய தினம் சட்ட மா அதிபரின் தீர்மானம் தொடர்பில்
அறிவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்றிருந்த அர்ஜுன ரணதுங்க நாடு திருப்பிய நிலையில் தமது அலுவலகத்தில் உள்ள பொருள்களை எடுப்பதற்காக கடந்த 28ஆம் திகதி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் மோதல் சம்பவமொன்றும் இடம்பெற்றிருந்தது. இதன்போது, மஹிந்த ஆதரவாளர்கள் தன் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தினார்.
அத்துடன், அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் அர்ஜுன ரணதுங்க பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக அர்ஜுன ரணதுங்கவும் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிந்தார்.