ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
வெயாங்கொடை, பாதுராங்கொட பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபரே இன்று (28) அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசாரணை நடவடிக்கைகளுக்காக குறித்த சந்தேக நபரை வெயங்கொடை ஹல்கம்பிடிய பகுதிக்கு பொலிஸார் அழைத்துச்சென்றிருந்த நிலையில், சந்தே நபர் மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.