ஆளும் ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி வசமுள்ள ருவன்வெல்ல பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கு எதிராக 17 வாக்குகளும் ஆதரவாக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ள.
ஐக்கிய தேசிய கட்சியின் 9 பேரும், சமசமாஜ கட்சியின் 3 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 2 உறுப்பினர்கள்,ஜே.வி.பி மற்றும் சுயாதீன குழு உறுப்பினர்கள் என எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெண் உறுப்பினர் ஒருவரும் சுதந்திர கட்சியின் ஓர் உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அத்துடன் எட்டியாந்தோட்டை பிரதேச சபை உப தலைவர் கூட வரவு செலவு திட்டத்திற்கு எதிராகவே வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை அண்மைய நாட்களாக மொட்டுக்கட்சி கட்டுப்பாட்டில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.