இலங்கையில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக அடுத்த ஆண்டில் 20 மில்லியன் தேயிலைக் கன்றுகளைப் பயிரிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கம்பனி தோட்டங்களை மறுசீரமைத்தல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகள், தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேயிலை உற்பத்தியில் பிரதானமாக தாக்கம் செலுத்தும் சிறு தேயிலைத் தோட்டம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உற்பத்தி 2015 ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை 300 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்து வந்த நிலையில், கடந்த வருடங்களில் தேயிலை உற்பத்தி 290 மில்லியன் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீழ்ச்சியடைந்துள்ள தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக தேயிலை பயிரிடும் 500 செயற்திட்டங்களின் ஊடாக 25 மில்லியன் தேயிலைக் கன்றுகளை சிறு மற்றும் பெருந்தோட்ட தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
Tags: இலங்கை தேயிலை
Continue Reading