முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையில் 2,024 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனால், நாட்டில் எந்த பகுதிகளில் இருந்தாலும் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்த சட்டவிதிகளை மீறும் நபர்களை கைதுசெய்வதுடன் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.