சிவப்பு எறும்பு சட்னி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் குணமாகுமா என்பது குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்குமாறு ஒடிஷா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸிற்கு இதுவரை அதிகாரப்பூர்வ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் சிவப்பு எறும்பு சட்னி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் குணமாகும் எனவும், அதுகுறித்து முடிவெடுக்கும்படியும் நயாதர் பதியால் என்னும் பொறியாளர் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.
அவர் கூறிய தகவலில், "சிவப்பு எறும்பு சட்னியில் ஃபார்மிக் அமிலம், புரதம், கால்சியம், விட்டமின் பி12, துத்தநாகம் மற்றும் இரும்பு சத்துகள் இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஒடிஷா, சட்டிஸ்கர் உள்ளிட்ட சில பகுதிகளில் வசித்துவரும் சில பழங்குடியின மக்கள் இந்த சிவப்பு எறும்பு சட்னியை சாப்பிட்டுவருவதாகவும், காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் இந்த சட்னியை பயன்படுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சிவப்பு எறும்பு சட்னியை உணவில் சேர்ப்பவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மிக குறைவாக காணப்படுவதாகவும், இந்த சிவப்பு எறும்பு சட்னியில் ஃபார்மிக் அமிலம், புரதம், கால்சியம், விட்டமின் பி12, துத்தநாகம் மற்றும் இரும்பு சத்துகள் இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக பதியால் தெரிவித்திருந்தார்".
அவர் தெரிவித்திருந்த இந்த கருத்து மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், ஒடிஷா உயர்நீதிமன்றத்தில் பதியால் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்குமாறு ஆயுஷ் அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு தடுப்பூசிகள் சோதனை முயற்சியில் இருக்கும்போது, தற்போது இந்த பட்டியலில் சிவப்பு எறும்பு சட்னியும் இணைந்துள்ளது.