web log free
January 11, 2025

தப்பி சென்ற கொரோனா நோயாளிகளின் புகைப்படம் வெளியானது

பொலநறுவை கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற மூன்று நோயாளர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் கடந்த 31ஆம் திகதி தப்பிச் சென்றனர். அதில் ஒரு தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மறைந்திருக்கும் தொற்றாளர்களான நாமர்மல, மாரவில. பொரலெஸ்ஸ மற்றும் வைக்கால பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரினால் வெளியிடப்பட்ட தொற்றாளர்கள் மூவரின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர்பில் ஏதாவது தகவல் கிடைத்தால் 071 8 591 233 என்ற இலக்கம் ஊடாக அல்லது 119 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுள்ளனர்.

இந்த நோயாளர்கள் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd