web log free
September 26, 2023

'சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன்'

கண்டியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பேரணியில், தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் கண்டியில் நடத்தப்படவுள்ள பேரணியில் கோட்டாபய ராஜபக்ஷ, முதலாவது அரசியல் மேடையில் ஏறவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, மார்ச் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதில் நான் பங்கேற்கமாட்டேன்.

நான் அரசியலில் நுழைவதற்கு இன்னமும் காலம் உள்ளது, நேரம் வரும் போதும், நான் அரசியலுக்கு வருவேன்.” என்று கூறியுள்ளார்.

மேலதிக தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.