web log free
October 01, 2023

60 மில்லியன் குரோனர்களை வழங்கும் நோர்வே

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 60 மில்லியன் குரோனர்களை வழங்க நோர்வே முன்வந்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர்  மரியன் ஹனென், நேற்று கொழும்பில் இதனை அறிவித்தார்.

நேற்றுக் காலை கொழும்பு வந்த அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போதே, கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைக்காக நோர்வேயின் நிதியுதவி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.