கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த மேலும் 10 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனப் பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும், அவர்களுடன் தொடர்புபட்ட பிரிவுகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், எதிர்வரும் 13, 15ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பாராளுமன்றத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருப்பதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ மேலும் குறிப்பிட்டார்.