உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்சைக்குரிய கருத்து வெளியிட்டிருந்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்கவிடம் 5 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இன்று (11) முன்னிலையாகியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், பஸில் ராஜபக்ஷவுக்கும் மற்றும் அவன்காட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கும் தொடர்பிருப்பதாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்கவிடம் இவ்வாறு சுமார் 5 மணிநேர விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.