நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் பிரதேசங்களின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ( 14) முற்பகல் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரதேச மட்டங்களிலும் கட்சி ரீதியிலும் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொண்டு கட்சி என்ற ரீதியில் முன்னோக்கி செல்லலாமென்றும் மக்களுடைய பிரச்சினைகளையும் தீர்க்கலாமென்றும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.