web log free
October 01, 2023

இடம்பெயர முயன்ற 30 பேர் கைது

சட்டவிரோதமான முறையில், இலங்கைக்குள் இடம்பெயர்வதற்கு முயன்ற, 30 பேரை, இன்று (07) அதிகாலை, இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

தெற்கு கடற்பரப்பில் 80 கடல்மைல் தூரத்தில் பயணித்துகொண்டிருந்த சந்தேகத்துக்கு இடமான படகை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்திய போதே, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட அவர்களை, கரைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Last modified on Wednesday, 11 September 2019 01:41