கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறை உண்ணா விரதப் போராட்டம் இன்று ஆரம்பமானது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்தீரீஸ்வரர் ஆலய வளாகத்தில் குறித்த அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்த இன்று காலைமுதல் குறித்த வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறையிலான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மதத் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.